Friday, February 24, 2012

கவிதை காதலர்கள்

கவிதை
18 -02 -2012 12௦௦ ௦௦௦:52 AM

முன்பெல்லாம் சங்கீதத்தின்
துணையுடன் தான்
ரயில் பயணம் - இப்போதோ
நினைவெல்லாம் சங்கீதா!
ஒரு சில மணித்துளிகள்
உன்னோடு பேசிடவே
வரம் கேட்டேன் - தேவி
வரமேனோ தரவில்லை
மீண்டும் சங்கீதத்தின்
துணையுடனே பயணத்தை
தொடருகின்றனே..., - சக்தி

18 -02 -2012 8௦ ௦௦: 20AM
சங்கீதாவின் துணை வேண்டி
நிராகரிக்கப் பட்டதை எண்ணி
நீயோ சங்கீதத்தின்
துணை நாடினாய்
ஆனால் நானோ - நீ
வரம் வேண்டியது அறிந்திராவிட்டாலும்
அங்கே சங்கீதமாய்
சஞ்சரித்தவளும் நானே
அதற்குரிய சக்தியாய் என்றும் நீ ! - சங்கீதா

Friday, February 3, 2012

மனதின் கெஞ்சல்


உனது பணிச்சுமையை
அறிந்திருக்கிறது
எனது அறிவுக் கண் - ஆனாலும்
என் மனது மட்டும்
ஒவ்வொருமுறை என் செல்பேசி
ஒலிக்கும் போதும் உனது
அழைப்பாக இருக்கவே மன்றாடுகிறது....,

- சக்தி